ஈரானுக்கு ஆதரவு… காஷ்மீரில் ஷியா முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்!
ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமியர்கள், ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகவும் அவர்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த ஆதரவு ஆர்ப்பாட்டம் காஷ்மீர் முழுவதும் கவனம் பெற்றது.

ஸ்ரீநகர், பட்காம் உள்ளிட்ட பகுதிகளில் ஷியா முஸ்லிம்கள் வீதிகளில் திரண்டு கோஷம் எழுப்பினர். அயத்துல்லா அலி காமேனியின் படங்கள் மற்றும் ஈரானுக்கு ஆதரவான பதாகைகளை அவர்கள் ஏந்தினர். சில இடங்களில் பேரணியும் நடைபெற்றது. இதேபோல் லடாக்கிலும் ஷியா மக்கள் ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரானிய மக்களுடன் தங்களுக்கு உள்ள மத மற்றும் சித்தாந்த பிணைப்பை வெளிப்படுத்தவே இந்த போராட்டம் என அவர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில், ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்நாட்டில் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
