வரலாறு கருகியது: சிம்லாவின் 800 ஆண்டுகள் பழமையான கியோந்தல் அரண்மனை தீ விபத்தில் அழிவு!

 
சிம்லா தீ

இமாசல பிரதேச மாநிலம் சிம்லா அருகே உள்ள ஜுங்கா (Junga) பகுதியில் அமைந்துள்ள கியோந்தல் அரண்மனை, அம்மாநிலத்தின் கட்டிடக்கலைக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தது.

நேற்று மதியம் சுமார் 1 மணியளவில் அரண்மனையில் புகை கிளம்பத் தொடங்கியது. பழைய தேக்கு மற்றும் செடார் (Cedar) மரங்களால் கட்டப்பட்ட அரண்மனை என்பதால், தீ மிக வேகமாக முழு கட்டிடத்திற்கும் பரவியது. பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும், அரண்மனையின் பெரும் பகுதி முற்றிலும் இடிந்து விழுந்தது.

இந்த அரண்மனையில் யாரும் வசிக்கவில்லை என்றாலும், அரச குடும்பத்திற்குச் சொந்தமான பழங்காலத் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. இவை அனைத்தும் தீயில் கருகிவிட்டதாக அரச குடும்ப உறுப்பினர் விஜய் ஜோதி சென் தெரிவித்துள்ளார்.

இந்த அரண்மனை 800 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா குஷ்வக்ரம் சென் காலத்தில் கட்டப்பட்டது. கியோந்தல் சமஸ்தானம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 18 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்படும் (18-gun salute) அந்தஸ்து பெற்ற சமஸ்தானங்களில் ஒன்றாகும். இந்த அரண்மனை முழுக்க முழுக்க 'கத்-குனி' (Kath-Kuni) என்ற இமாசலத்தின் பாரம்பரிய மர வேலைப்பாடுகளால் ஆனது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!