வங்கதேச வரலாற்றில் முதல் பெண் சபாநாயகர் ஷிரின் ஷார்மின் சவுத்ரி கைது!

 
வங்கதேசம் வங்கதேசம்

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டில் அரசியல் மாற்றங்கள் அதிரடியாக நிகழ்ந்து வருகின்றன. தற்போது தாரிக் ரகுமான் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், முந்தைய அவாமி லீக் அரசின் முக்கியப் புள்ளிகள் மீதான கைது நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. அந்த வகையில், அவாமி லீக் கட்சியின் மூத்த பெண் தலைவரும், வங்காளதேச நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகருமான ஷிரின் ஷார்மின் சவுத்ரி நேற்று டாக்காவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தின் போது அரங்கேறிய வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 2013-ம் ஆண்டு வங்காளதேச நாடாளுமன்றத்தின் முதல் பெண் சபாநாயகராகப் பொறுப்பேற்று வரலாறு படைத்த இவர், தொடர்ந்து 4 முறை அந்தப் பதவியை அலங்கரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2024-ம் ஆண்டு அரசியல் சூழல் காரணமாகத் தனது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது போராட்ட வன்முறை வழக்கில் சிக்கியுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஷிரின் ஷார்மின் சவுத்ரி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, அதனைத் தள்ளுபடி செய்து அவரை சிறையில் அடைக்க அதிரடியாக உத்தரவிட்டார். ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், உள்நாட்டில் அவாமி லீக் தலைவர்கள் அடுத்தடுத்துக் கைது செய்யப்படுவது அந்த நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை முன்னாள் ஆளுங்கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!