நள்ளிரவில் அகோரிகள் நடத்திய சிவராத்திரி பூஜை.. பெண் அகோரிகளும் பங்கேற்பு!

 
திருச்சி அகோரி அரியமங்கலம்

நேற்று நாடு முழுவதுமே மஹா சிவராத்திரி கோலாகலமாக நடைப்பெற்றது. லட்சக் கணக்கான பக்தர்கள் நாடு  முழுவதும் சிவாலயங்களில் திரண்டிருந்து பூஜைகள், வழிபாடுகளைச் செய்தனர். இந்நிலையில், திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில், அகோரிகள் நள்ளிரவில் சிவ பூஜைகளைச் செய்து வழிபட்டனர். இந்த பூஜையில் பொதுமக்களும், பெண் அகோரிகளும் கலந்து கொண்டனர்.

அரியமங்கலம் உய்யக் கொண்டான் வாய்க்கால் கரை ஓரத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சியைச் சேர்ந்த அகோரி மணிகண்டன், காசியில் பயிற்சி பெற்ற பின் அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி சிலையை பிரதிஷ்டை செய்து  அதற்கு தினந்தோறும் பூஜைகள் செய்து வந்தார்.

திருச்சி அகோரி அரியமங்கலம்

நாளைடைவில் அரியமங்கலத்திற்கு பக்தர்களின் வருகை அதிகமாக வர தொடங்கியதும் விசேஷ காலங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற ஆரம்பித்தது.  இந்நிலையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவில் சிறப்பு யாகங்கள் நடைபெற்றது.  திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்து 20க்கும் மேற்பட்ட அகோரிகள் இந்த நள்ளிரவு பூஜையில் கலந்து கொண்டனர்.  அவர்கள்  உடல் முழுவதும் திருநீரு பூசிக் கொண்டு இந்த சிறப்பு யாகத்தில் அமர்ந்து மந்திரங்கள் ஜெபித்தனர்;

அப்போது அகோரி மணிகண்டன் கையில் ருத்ராட்ச மணிகளை உருட்டியபடி மந்திரங்கள் ஓதபட்டு  நவ தானியங்கள், பழங்கள் மூலிகைகள் உள்ளிட்டவைகளை யாகத்தில் இட்டு பூஜை செய்தார் அப்போது  சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்தும், சங்கு ஒலி எழுப்பியும் ஹர ஹர மகாதேவ் என முழக்கமிட்டனர். 

திருச்சி அகோரி அரியமங்கலம்

முன்னதாக அங்கு பிரதிஷ்டை செய்யபட்டுள்ள ஜெய் அகோர காளிக்கு அலங்காரம் செய்தும்,  அதே போல் ஜெய் அஷ்ட கால அகோர பைரவருக்கு  அலங்காரம் செய்தும் சிறப்பு பூஜைகள் செய்தனர்.  இந்த பூஜைகளில் பெண் அகோரிகள், வட மாநிலத்தவர் உள்பட திரளான, பக்தர்கள் கலந்து கொண்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?