"தகுதியற்றவர்களிடம் பொறுப்பு" - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை வறுத்தெடுத்த ஷோயப் அக்தர்!

 
பாகிஸ்தான் கிரிக்கெட்

கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இது அந்த அணியின் முன்னாள் வீரர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பேசிய அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வியை நேரடியாகத் தாக்கினார். "உலகிலேயே மிகப்பெரிய குற்றம் என்னவென்றால், ஒரு தகுதியற்ற நபரிடம் (Incompetent person) மிகப்பெரிய பொறுப்பை ஒப்படைப்பதுதான். அவருக்கு கிரிக்கெட் வாரியத்தை எப்படி நடத்துவது என்றே தெரியவில்லை" என்று ஆவேசப்பட்டார். விவாதத்தின் போது 'ஜாஹில்' என்ற கடுமையான வார்த்தையைப் பயன்படுத்தி வாரியத் தலைவரை விமர்சித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா கிரிக்கெட்  பாகிஸ்தான்

நிர்வாகம் மட்டுமன்றி, அணியின் நட்சத்திர வீரர்களான பாபர் அசாம், ஷாகின் அப்ரிடி, ஷதாப் கான் ஆகியோரையும் அவர் விட்டுவைக்கவில்லை: "இவர்களை நீங்கள் சூப்பர் ஸ்டார் என்கீறீர்கள். ஆனால் இவர்களால் ஒரு போட்டியைக்கூட வென்று தர முடியவில்லை. ஒரு வீரர் 10 ஓவர்கள் கூட வீச முடியாத நிலையில் அவரை நீங்கள் நட்சத்திரமாக மாற்றியுள்ளீர்கள்" எனச் சாடினார்.

தனது விமர்சனம் சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று பிப்ரவரி 17ம் தேதி  அக்தர் தனது நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்தைச் செய்துள்ளார் எனது வார்த்தைகள் மொஹ்சின் நக்வியை தனிப்பட்ட முறையில் தாக்கும் நோக்கத்தில் சொல்லப்பட்டவை அல்ல. இந்திய ஊடகங்கள் எனது பேச்சைத் தவறாகத் திரித்துக் கூறிவிட்டன" என்று ஒரு பாகிஸ்தான் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

இந்தியா பாகிஸ்தான்

மொஹ்சின் நக்வி ஒரு நல்ல மனிதர் என்றும், அவருக்குச் சரியான ஆலோசனைகள் வழங்கப்படவில்லை என்றும் தற்போது கூறி வருகிறார். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 8 முறையும், பாகிஸ்தான் ஒரே ஒரு முறையும் (2021-ல்) வெற்றி பெற்றுள்ளன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!