அதிர்ச்சி!! யூடியூப் வீடியோ பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்த 15 வயது சிறுமி !!

 
கர்ப்பம்

கொரோனா காலகட்டத்திற்கு பிறகு குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை தனித்தனி மொபைல் போன்கள். சமூக வலைதளங்களில் கொட்டிக்கிடக்கும் தேவையற்ற தகவல்களை தான் இளைய சமுதாயம் தேடி தேடி பார்க்கிறது. இதனால் பல நேரங்களில் பெரும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் பகுதியில் வசித்து வருபவர் 15 சிறுமி. இந்த சிறுமியின் தாயார் வணிக வளாகத்தில் பணிபுரிந்து வருவதால் காலையில் கிளம்பினால் வீடு திரும்ப இரவாகி விடும். இதனால் சிறுமி அத்தனை நேரமும் பள்ளி சென்று விட்டு வீட்டில் தனியாகவே இருப்பார். இந்த சிறுமி அதே பகுதியில் உள்ள  ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் எந்நேரமும் மொபைலும் கையுமாகவே இருப்பார். அதில் இன்ஸ்டா மூலம் பழக்கம் ஏற்பட்டு தாக்கூர் என்ற இளைஞருடன் தொடர்பில் இருந்துள்ளார். இருவரும் தனிமையில் சந்தித்துள்ளனர்.

போலீஸ்

இதனால் சிறுமி கர்ப்பமானாள்.  மாணவியின் வயிறு பெரிதாவதை கண்டு அவருடைய தாயார் விசாரித்த போது உடல் நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளதாக சிறுமி சமாளித்து வந்தாள்.  பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு சென்றால் மாட்டிக் கொள்வோம் என பயந்து வீட்டில் இருந்தபடியே யூ-டியூப் பார்த்து பிரசவம் பார்த்துக் கொள்ள முடிவு செய்தார். இது குறித்த வீடியோக்களை தேடித் தேடி பார்த்து வந்தார்.  மார்ச் 3ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுமி யூ-டியூப்பில் வீடியோக்களை பார்த்து தானாகவே குழந்தையை பெற்றெடுத்தார்.  சிறிது நேரத்தில் குழந்தை அழுத உடன் என்ன செய்வது எனத் தெரியவில்லை. இந்த சத்தம் கேட்டால் மாட்டிக் கொள்வோம் எனப் பயந்து சிறுமி பெல்ட்டால் குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு வீட்டில் உள்ள ஒரு பெட்டியில் குழந்தையின் உடலை  மறைத்து வைத்துள்ளார்.

கொரோனா காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு சரிவு..!

 

வேலை முடிந்து வீடு திரும்பிய சிறுமியின் தாயார் வீட்டின் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து  தாயார் சிறுமியிடம் விசாரித்த போது தனது மாதவிலக்கை காரணம் காட்டினார். ஆனால் சிறுமியின் தாயாருக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டதால் தொடர்ந்து விசாரித்த போது நடந்த சம்பவங்களை தாயிடம் கூறி சிறுமி கதறி அழுதார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர்  கொலை செய்யப்பட்ட பிறந்த குழந்தை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.அத்துடன்  சிறுமி மிகவும் பலவீனமாக இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர்  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web