அதிர்ச்சி!! கேஸ் கசிவு ஏற்பட்டதால் கேஸ் நிறுவன ஊழியர் பலி!!

நீலகிரி மாவட்டம் குன்னூரில் காரக்கொரை கிராமத்தில் வசித்து வருபவர் கோபால். இவரது மனைவி 58 வயது கண்ணம்மாள். கோபால் வங்கிக் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். ஊரில் பண்டிகை நடைபெற்று வருகிறது. வழக்கம் போல் கண்ணம்மாள் இன்று வீட்டில் காலையிலேயே சமையலில் ஈடுபட்டார். அப்போது கியாஸ் அடுப்பை பற்ற வைத்த போது எரியவில்லை. சிலிண்டர் காலியாகி இருந்தது. இதனால் வீட்டில் இருந்த மற்றொரு சிலிண்டரை எடுத்து மாட்டித் தருவதற்காக தனது வீட்டின் அருகே வசித்தும் வரும் 53 வயதான நடராஜை அழைத்தார்.
இவர் கேஸ் நிறுவனத்தில் கிளர்க்காக பணிபுரிந்து வருபவர். நடராஜ் கண்ணம்மாவின் வீட்டிற்கு சென்று சிலிண்டரை மாற்றி கொண்டிருந்தார். திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டு பெரும் தீவிபத்து ஏற்பட்டது. வீடு முழுவதும் கேஸ் புகை பரவி அந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக காட்சி அளித்தது. வீட்டிற்குள் கேஸ் பரவத் தொடங்கியதும் கோபாலும், கண்ணம்மாளும் வீட்டில் உள்ள குளியல் அறைக்குள் சென்று இருந்து கொண்டனர்.
நடராஜ் வீட்டிற்குள் இருந்த மற்றொரு அறைக்கு சென்று விட்டார். கண்ணம்மாளின் வீட்டில் இருந்து புகை வந்ததை பார்த்ததும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து வீட்டிற்குள் சென்று உள்ளே இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் நடராஜ், கண்ணம்மாள் ஆகியோர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர்.
அவர்களை மீட்டு காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நட்ராஜ் உயிரிழந்தார். கண்ணம்மாள் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேஸ் கசிவு ஏற்பட்டு, கேஸ் நிறுவனத்தில் பணி புரிந்தவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க