அதிர்ச்சி!! பெற்ற தாயே 5 குழந்தைகளை கொலை செய்த கொடூரம்.!! தாய் கருணைக் கொலை !!

 
ஜெனி

பெல்ஜியம் நாட்டில் வசித்து வருபவர்  58வயதான  ஜெனிவீ லெர்மிட் . இவருக்கு 4 மகள்கள், ஒரு மகன்.  ஜெனி இவர்களை 5 பேரையும்  2007, பிப்ரவரி 28ம் தேதி  கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அத்துடன் தன்னையும் கத்தியால் குத்தி தற்கொலை செய்ய முயற்சி செய்தார். இவர்கள் மட்டும் துரதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.  ஜெனி தானே போலீசில் சரணடைந்த நிலையில்  பெற்ற குழந்தைகளையே இப்படி கொடூரமாக கொலை செய்த ஜெனிவீக்கு ஆயுள் தண்டனை விதித்து பெல்ஜியம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஜெனி

சிறைவாசத்தில் இருந்த பெண்ணுக்கு தீவிர மன நல பாதிப்பு ஏற்பட்டது. தொடர் சிகிச்சையில் இருந்த அவர் 2019ல் சிறையில் இருந்து மனநல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 
இந்நிலையில், தன்னால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு மன நல பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ளேன், எனவே கருணை கொலை செய்துவிடுங்கள் என ஜெனிவீ தனது வக்கீல் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். பெல்ஜியம் நாட்டில் ஒரு நபர் தவிர்க்க முடியாத சூழலில் கருணை கொலை செய்து கொள்ள அந்நாட்டு சட்டம் அனுமதிக்கிறது.

ஜெனி
அதன்படி, ஜெனிவீ விருப்பத்தின் பேரில் தனது குழந்தைகளை கொன்ற பிப்ரவரி 28ம் தேதி அன்றே சரியாக 16 ஆண்டுகள் கழித்து கருணை கொலை செய்யப்பட்டார். அவருக்கு உரிய வகையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு கருத்துகளை பெற்ற பின்பே கருணை கொலை செய்யப்பட்டதாக அவருடைய வக்கீல் நிக்கோலஸ் கோஹன் தெரிவித்துள்ளார். 
உடல் நல மற்றும் மனநல காரணங்களை காட்டி பெல்ஜியம் நாட்டில் கருணை கோரிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில்  கடந்தாண்டில் மட்டும் 2,966 பேர் கருணைக்கொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கை 2021ஐ  காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும்..

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web