அதிர்ச்சி!! மணமகன் மேடையில் சரிந்து விழுந்து மரணம்!! மியூசிக்கால் விபரீதம்!!

 
மணமகன்

இன்றைய வாழ்க்கை முறையில் திருமணங்கள் பெரும் பகட்டாகி விட்டன. விரும்பத்தகாத ஆடம்பரங்களும், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என  பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு  கலாச்சார சீரழிவாக மாறி வருகிறது. பறந்து வரும் மணமகன், ஆடிக்கொண்டே வரும் மணமகள், காதை செவிடாக்கும் இன்னிசைக் கச்சேரி, மூச்சு முட்டும் அளவுக்கு திருமணப் பந்தி, வசதியை பறைசாற்றும் தாம்பூல பைகள் என கேளிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இவை பார்ப்பதற்கு மட்டுமல்ல பல நேரங்களில் அபாயங்களும், சங்கடங்களும் நேர்ந்து விடுகின்றன. 

பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் உள்ள மணிந்தர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேந்திர குமார் (22). இவருக்குப் புதன்கிழமை அன்று இந்தர்வா கிராமத்தில் திருமணம் நடந்துள்ளது. அங்கு அப்போது அனைவரும் மகிழ்ச்சியாகவே இருந்தனர். மணமகனின்முகம் மட்டும் இருக்கமாகவே இருந்தது. அங்குத் திருமணத்திற்காக டிஜே இசை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் உரத்த சத்தத்தில் பாடல்களை இசைக்கத் தொடங்கியதால் மணமகனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. 

DJ

இதனால் பாடல்களை நிறுத்துமாறு அவர் பல முறை சொல்லியுள்ளார். குறைந்தது சத்தத்தைக் குறைக்குமாறு கேட்டுக் கொண்டார். இருப்பினும் டிஜே இசைக்கு அங்குப் பலரும் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தனர். இதனால் மணமகன் சொன்னதை யாருமே கண்டுகொள்ளவில்லை. இந்தச் சூழலில் தான், அவர் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு மேடையிலேயே சரிந்தார். 

இதையடுத்து பதறியடித்துக் கொண்டு அவரே அருகே இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் சில நிமிடங்களில் உற்சாகமாக இருந்த திருமண வீடு துக்க வீடாக மாறிவிட்டது.

அழுகிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம்- கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், “நாங்கள் அளித்திருக்கும்] பரிந்துரையைக் காட்டிலும் அதிக ஒலியைக் கேட்கத் தொடங்கும் போது பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகிறது. காதுகுழலில் பிரச்சினையை ஏற்படுத்துகிறது. மேலும், சிலருக்கு இதய பிரச்சனைகள், தூக்கமின்மை மற்றும் நுரையீரல் தொடர்பான பாதிப்புகளையும் கூட ஏற்படுத்துகிறது. இருப்பினும், இதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. இதுவே பிரச்சினை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web