அதிர்ச்சி!! 50 க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொலை!!

 
நாய்கள்

நகரங்களில் அப்பார்ட்மெண்ட்களில் மட்டுமல்ல கிராமங்களில் காவல்களுக்காகவும், விளைநிலங்களில் அசலார்கள் வராமல் இருக்கவும் நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பொதுவாக அனைத்து வீடுகளிலும் நாய்கள் வளர்த்து வருகின்றனர்.  மொத்தமாக 50க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ள நிலையில் அத்தனை நாய்களும் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. 

நாய்கள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலத்தை சுற்றி சிறு, சிறு கிராமங்கள் அநேகம். கோவில்பட்டி, வையத்தான், மம்பட்டிபட்டி, நரியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீடுகளில் நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மொத்தமாக  50க்கும் மேற்பட்ட நாய்களை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாய்கள்

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கொள்ளை கும்பல் கொள்ளையடிக்க திட்டமிட்டு நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்தனரா, கிராமப்புற பகுதிகளில் வெளி நபர்கள் யாரும் வலம் வருகின்றனரா என பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web