அதிர்ச்சி!! பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து இளைஞர் உயிரிழப்பு!!

 
ஷியாம் யாதவ்

சமீபகாலமாக மிக இளம் வயதில் மாரடைப்பு காரணமாக உயிரிழப்புக்கள் அதிகரித்துவருகின்றன. பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரை யாரும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. அந்த வகையில் பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருந்த விளையாட்டு வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் லல்லாகுடா பகுதியில் வசித்து வருபவர் ஷியாம் யாதவ். இவருக்கு வயது 38.

ஷியாம் யாதவ்

இவர்  உள்ளரங்கம் ஒன்றில் பேட்மிண்டன் விளையாட்டை விளையாடி கொண்டு இருந்தார். தினமும் பணி முடிந்த பிறகு  கிரிக்கெட் மற்றும் பேட்மிண்டன் விளையாட்டில் அவர் பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.  இந்நிலையில், பேட்மிண்டன் பயிற்சியின்போது திடீரென அவர் மயங்கி சரிந்து கீழே விழுந்தார். அவருடன் இருந்த அவரது நண்பர்கள் அவரை உடனடியாக தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மரணம் அடைந்து விட்டதாக தெரிவித்தனர்.  இது குறித்து காவல்துறை ஆய்வாளர் விடுத்த செய்திக்குறிப்பில் மயங்கி விழுந்தவரை அவருடைய நண்பர்கள் சிகிச்சைக்கு கொண்டு சென்று விட்டனர் .  

ஷியாம் யாதவ்

தொடர் விசாரணையில், பேட்மிண்டன் விளையாடியபோது திடீரென அந்த நபர் சரிந்து விழுந்து உள்ளார். அப்போது அவருக்கு மூச்சு இருந்ததாக அவருடைய நண்பர்கள் தெரிவித்தனர். தெலுங்கானாவில் நிர்மல் மாவட்டத்தில் பைனா நகரில், சில நாட்களுக்கு முன் 19 வயது இளைஞர்  திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடனம் ஆடிக் கொண்டிருந்தபோதே திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்து போனார். மகாராஷ்டிராவில் அவர் மயங்கி சரிந்ததும், உடனடியாக சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதே போல் மீண்டும் தற்போது நிகழ்ந்துள்ளது இளசுகளிடையே மட்டுமல்ல அவரது பெற்றோற்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் உருவாக்கியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web