அதிர்ச்சி! 10 நாட்களில் சவரனுக்கு ரூ.3240 எகிறிய தங்கம்... ரூ.50,000 வரை உயரும் வாய்ப்பு!

 
தங்கம்

கடந்த பத்து நாட்களில் மட்டுமே தங்கம் விலை சவரனுக்கு ரூ.3240 உயர்ந்துள்ள நிலையில், ஆபரண தங்கத்தின் விலை விரைவில் சவரனுக்கு ரூ.50 ஆயிரம் வரை உயரும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உலகளவில் பங்கு சந்தையில் தற்போது நீடித்து வரும் சரிவு நிலையில், பலரும் பங்கு சந்தை வர்த்தகத்தில் இருந்து தங்களது முதலீட்டை தங்கத்தின் பக்கமாக திருப்பி உள்ளனர். இந்நிலையில், தொடர்ந்து ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாற்றில் இல்லாத அளவுக்கு நேற்று அதிரடியாக உயர்ந்தது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 110 ரூபாய் உயர்ந்து, 5,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 880 ரூபாய் அதிகரித்து 44,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி 2-ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை 44,040 ரூபாயை எட்டியதே உச்சமாக இருந்தது. ஆனால் வரலாற்றில் இல்லாத அளவிற்கு நேற்று தங்கம் விலை உயர்ந்து மக்களை அதிர்சிக்குள்ளாக்கியது.

Gold-Price

இந்நிலையில், தங்கம் விலை மேலும் அதிகரிக்கலாம் என்றும் ஒரு சவரன் தங்கம் 50,000 ரூபாயை எட்டும் எனவும் நகை விற்பனையாளர்கள் கணித்துள்ளனர். மேலும் அதற்கான காரணத்தையும் அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

அமெரிக்காவில் இரண்டு வங்கிகள் திவாலானதால் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்திருப்பதும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவடைவதும் தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என தங்க, வைர நகை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.

Gold-Price

கடந்த 9-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.41,240 என விற்பனையான நிலையில், நேற்று ஒரு சவரன் தங்கம் 44,480 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. விறு விறுவென அதிகரிக்கும் தங்கம் விலை கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு 3,240 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தகக்து.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web