அதிர்ச்சி!! ஒரே நாளில் 1,805 பேருக்கு கொரோனா!!

 
கொரோனா

2020 ம் ஆண்டில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு அதன் மூலம் படிப்படியாக தொற்று குறைக்கப்பட்டு தற்போது தான் இயல்பு நிலை திரும்ப தொடங்கியது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியதாக சுகாதாரத்துறை அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் 1,743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

கொரோனா

இந்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,47,05,890 ஆக அதிகரித்துள்ளது.


கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,30,837 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 932 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் இதுவரை 4,41,64,815 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 10,300 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா

நேற்று ஒரே நாளில் 56,551 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை மொத்தம் 92,30,40,337 கொரோனா மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் என ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதுவரை 220.65 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web