அதிர்ச்சி!! பிரபல நடிகர் கவலைக்கிடம்!! திரையுலகில் அடுத்தடுத்த சோகம்!!

 
இன்னசெண்ட்

க்ன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் உடற்பயிற்சியின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது முதல் திரையுலகில் அடுத்தடுத்த மரணங்களை திரையுலகை கலங்கடித்து வருகின்றன. மூத்த கலைஞர்கள் , இளம் வயதினர் என்ற வயது வித்தியாசம் இன்றி  திடீர் உயிரிழப்புக்கள், மரணங்கள் ஏற்பட்டு மக்களை பீதியில் ஆழ்த்தி வருகின்றன. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இத்தகைய அசாதாரண திடீர் மரணங்கள் ஏற்பட்டு வருவது திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

1972-ல் வெளியான ‘நிர்தசாலா’ படித்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானவர் இன்னொசென்ட்டின். அதனைத் தொடர்ந்து 750-க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி, குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தமிழில் ‘லேசா லேசா’ படத்தின் மூலம் அறிமுகமான இவர், நான் அவளை சந்தித்தபோது உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

இன்னசெண்ட்

சிறந்த நடிகருக்கான கேரள மாநில அரசு விருதுகளைப் பெற்றுள்ள இன்னொசென்ட், மலையாள நடிகர் சங்கத் தலைவராகவும் பதவி வகித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இன்னொசென்ட் கடந்த 2012-ம் ஆண்டு தொண்டை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.

இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இன்னொசென்ட் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு மீண்டும் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இன்னசெண்ட்

இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த நிலையில், இன்னொசென்ட் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web