அதிர்ச்சி... 11.5 கிலோ கஞ்சா... சிறுவன் உட்பட 3 பேர் கைது!
தூத்துக்குடியில் விற்பனைக்காக காரில் கஞ்சா வைத்திருந்த 3பேரை போலீசார் கைது செய்தனர். 11 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் அருளப்பன், சார்பு ஆய்வாளர் முகிலரசன் உட்பட காவல்துறையினர் இன்று கோமஸ்புரம் சேதுபாதை ரோடு சந்திப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

திருநெல்வேலி ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் ஜெபராஜ் (28), தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த காளிராஜன் மகன் கார்த்திக் ராஜா (24) மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த இளஞ்சிறார் ஒருவர் என்பதும் விற்பனைக்காக காரில் கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.

உடனடியாக போலீசார் ஜெபராஜ் மற்றும் கார்த்திக்ராஜா ஆகிய இருவரை கைது செய்தும், இளஞ்சிறாரை கையகப்படுத்தியும் அவர்களிடமிருந்த மொத்தம் 11 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
