அதிர்ச்சி... மின்சாரம் தாக்கி 12 வயது சிறுமி உயிரிழப்பு!

 
 அனுஷ்கா
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே மின் மோட்டாரை இயக்கிய போது, மின்சாரம் தாக்கி 12 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே திருமேனிஏரி கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் - மீனா தம்பதியின் மகள்அனுஷ்கா (12). 8ம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலையில் வீட்டில் இருந்த அனுஷ்கா மின் மோட்டாரை இயக்குவதற்காக சுவிட்சை போட்டுள்ளார்.

மின்சாரம்

அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி மீது மின்சாரம் பாய்ந்தது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் அனுஷ்காவை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து திருமக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web