அதிர்ச்சி... 1800 பேர் படுகாயம்... 200யைக் கடந்த பலி எண்ணிக்கை... மருந்து இருப்பு குறைவு... மேலும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு!

 
சூடான்

சூடானில் ஏற்பட்டுள்ள ராணுவ புரட்சியில் 2000க்கும் அதிகமானோர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோதலில் 200க்கும் அதிகமானோர்கள் உயிரிழந்துள்ளனர். மருந்து கையிருப்பு குறைவாக இருப்பதாலும், சிகிச்சையளிக்க நேரம் குறைவாக இருப்பதாலும், இந்த பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருப்பதாக அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கிறார்கள் களத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள். சூடானில் அந்நாட்டின் ராணுவ ஜெனரலான ஒமார் அல் பஷீரின் கீழான ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் சூடானில் ராணுவம் - துணை ராணுவம் இடையே எழுந்த அதிகாரப் போட்டி பெரும் மோதலாக வெடித்துள்ளது. தலைநகர் கார்டோமில் அதிபர் மாளிகை, அரசு தொலைக்காட்சி மற்றும் ராணுவ தலைமையகத்தைப் பிடிக்க இரு தரப்பும் கடுமையாக சண்டையிட்டுக் கொண்டுள்ளன.

ராணுவ ஆட்சியைக் கைவிட்டு ஜனநாயக ரீதியிலான ஆட்சிக்கு திரும்ப வேண்டும் என முன்மொழியப்பட்ட நிலையில் இந்த மோதல் தொடங்கியுள்ளது. இரவு முழுவதும் சண்டை நீடித்த நிலையில், கார்டோம் நகரில் விமான நிலையம் உள்ளிட்ட முக்கியமான இடங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ராணுவம், அதற்கு எதிராக போரிடும் துணை ராணுவமும் கூறுகின்றன.

துணை ராணுவப் படைத் தளங்கள் மீது போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை இரவில் துணை ராணுவப் படைகளின் நடமாட்டத்தை கண்காணித்துக் கொண்டிருந்த விமானப்படை, பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.


முதற்கட்டமாக, அந்நாட்டு மருத்துவர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி காயமடைந்தவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரண்டு படைப்பிரிவின் தளபதிகளுக்கிடையிலான கருத்து மோதல் பல மாதங்களாகவே நீடித்து வருகிறது. ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் சூடானில் ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வநத நிலையில் இந்த உள்நாட்டு போர் பொருளாதார ரீதியாகவும் பெரிய பின்னடைவை கொண்டு வரும் என அந்நாட்டு மக்கள் கவலையடைந்துள்ளனர்.

சூடான் நாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் அந்நாட்டில் மீண்டும் மக்களாட்சி மலர வேண்டும் என முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், அதை குலைக்கும் வகையில் இரண்டு ராணுவப் படைப் பிரிவுகளும் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சூடான்

துணை ராணுவப்படையின் அதிகாரங்களை பிடுங்கும் செயலில் ராணுவ தளபதி ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி வருகிறது துணை ராணுவப்படை. ராணுவ தளபதியை கிரிமினல் என்று ஆர்.எஸ்.எஃப். கமாண்டர் முகமது ஹம்தான் தக்லா குறிப்பிட்டுள்ளார். இது போன்ற மோசமான தாக்குதல்களை கார்தோம் நகரில் தாங்கள் இதுவரை பார்த்ததில்லை என அந்நாட்டு பொதுமக்கள் கூறுகின்றனர். இதற்கு தீர்வுகாண சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், எகிப்து, கத்தார், சவுதி அரேபியா மற்றும் துபாய் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு போரில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த  மோதல் சம்பவத்தில், கேரளாவை சேர்ந்த இந்தியர் ஒருவர் பலியாகியுள்ளார். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை தூதரகம் வழங்கும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைசச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web