அதிர்ச்சி... தேசிய விளையாட்டுப் போட்டியில் ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய 25 விளையாட்டு வீரர்கள்!

 
தேசிய விளையாட்டு போட்டி

சதுரங்கம், கிரிக்கெட், தடகளம், துப்பாக்கி சுடுதல் என அடுத்தடுத்து உலக அரங்கில் விளையாட்டில் இந்தியா தற்போது ஜொலித்து வருகிறது. பெண்கள் அணியினரும் பல போட்டிகளில் தங்கப் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். இந்நிலையில், 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட  விளையாட்டு வீரர்களில் 25 பேர் ஊக்க மருந்து பயன்படுத்தியது மருத்துவ பரிசோதனையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களைப் பற்றிய கவலையை இது விதைத்துள்ளது.

37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் கோவாவில் அக்டோபர் 26-ம் தேதி முதல் நவம்பர் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். மொத்தம் 43 விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 80 தங்கம் உட்பட 228 பதக்கங்களைக் குவித்து மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தைப் பிடித்தது. 19 தங்கம் உட்பட 77 பதக்கங்களுடன் தமிழகம் 10-வது இடத்தைப் பிடித்தது. இதனிடையே, இந்த விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்ட வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது.

37வது தேசிய விளையாட்டு ஊக்க மருந்து சோதனை

அதன் ஆய்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், பதக்கம் வென்ற 7 பேர் உட்பட 25 வீரர், வீராங்கனைகள் ஊக்க மருந்து பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து, அவர்கள் அனைவரையும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு முகமை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளது.

தேசிய விளையாட்டு போட்டி

இவர்களிடம் நடத்தப்படும் விசாரணையைத் தொடர்ந்து, குற்றம் நிரூபிக்கப்படும் வீரர்கள் 2 முதல் 4 ஆண்டுகள் வரை விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளத் தடைவிதிக்கப்படுவார்கள். ஊக்க மருந்து சோதனையில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் வீரர்கள் சிக்கியிருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web