அதிர்ச்சி... 2.5 கோடி போலி பயனர் ஐடிக்கள்... ரயில் டிக்கெட் முன்பதிவில் மோசடி!
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று இந்தியன் ரயில்வே . தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகிறனர். தொலை தூர பயணங்களுக்கு குறைவான கட்டணம் வசூலிக்கப்படுவதால் நடுத்தர வர்க்கத்தினருக்கு ரயில் பயணம் தான் ஏதுவாக உள்ளது. இந்த ரயில்களில் பயணம் மேற்கொள்ள டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது அவசியம். அதிலும் பண்டிகை காலங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்வது என்பது பெரும் சவால் தான். இதனால் கடைசி நேர பதற்றம் குறையும். பொதுவாகவே பண்டிகை காலங்களில் 60 முதல் 120 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும். அப்படி டிக்கெட் முன்பதிவு செய்த சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடும்.

இதனையடுத்து ரயில்வே நிர்வாகம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் யூசர் ஐடிகளை ஆய்வுக்கு உட்படுத்தி தேடியது. இதில் ரயில்களில் டிக்கெட் முன்பதிவுக்காக தொடங்கப்பட்ட 2.5 கோடி போலி கணக்குகள் கண்டறியப்பட்டன. ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு 60 நாட்களுக்கு முன்பே தொடங்கினாலும் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. போலி கணக்குகளை தொடங்கி முன்பதிவு சில நிமிடங்களிலேயே பல லட்சம் டிக்கெட்டுகளை சில கும்பல் முன்பதிவு செய்துவிடுகின்றன.

இதனால் பயணிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். ஜனவரி முதல் மே மாதம் வரையிலான 5 மாதங்களில் புக்கிங் தொடங்கிய 5 நிமிடங்களில் 2.9 லட்சம் பி.என்.ஆர்.கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து ரயில்வே துறை நடத்திய தீவிர ஆய்வில் 2.5கோடி போலி யூசர் ஐடிக்களை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டிக்கெட் முன்பதிவில் முறைகேட்டை தடுக்க மேலும் 20 லட்சம் யூசர் ஐடிக்களை மறுமதிப்பீட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
