அதிர்ச்சி... 5 மாத குழந்தை தண்ணீர் பேரலில் மூழ்கி பலி!

தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கண்ணாங்குடி பகுதியில் வசித்து வருபவர் 31 வயது மணிகண்டன். இவரது மனைவி புலியூரை சேர்ந்த லாவண்யா. இவர்களுக்கு 5 மாதங்களான ஆதிரன் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் குடும்பத் தகராறு காரணமாக லாவண்யா தனது பெற்றோர் வீட்டில் கடந்த 3 மாதமாக குழந்தையுடன் வசித்து வந்தார். கணவர் மணிகண்டன் நாக்பூர் மாநிலத்தில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இருவருக்கும் இடையில் வயது வித்தியாச பிரச்சனை மற்றும் குடும்ப பிரச்சனையில் விவாகரத்து பெரும் எண்ணத்தில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் புலியூரில் பெற்றோர் வீட்டில் வசித்து வரும் லாவண்யா நள்ளிரவில் குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தபோது, மற்ற குடும்ப உறுப்பினர்களும் தூங்கியதாக கூறப்படுகிறது. அப்போது லாவண்யா திடீரென குழந்தையை காணவில்லை என கத்தி கூச்சலிட்டுள்ளார். முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் தாலிச் சங்கிலியை பறித்து சென்றதாகவும், குழந்தையையும் தூக்கி சென்றதாகவும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். பதட்டம் அடைந்த உறவினர்கள் வீட்டைச் சுற்றி குழந்தையை தேடியுள்ளனர். அப்போது வீட்டின் பின்புறத்தில் உள்ள தண்ணீர் பேரலில் குழந்தையின் உடல் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலின் பேரில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் தீவிர விசாரணை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!