அதிர்ச்சி... வீட்டிற்குள் புகுந்த 6 அடி கட்டு விரியன் பாம்பு!

 
கட்டு விரியன் பாம்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் துறைமுக சபை உறுப்பினர் வீட்டிற்குள் நுழைந்த 6 அடி நீள கட்டு விரியன் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். 

தூத்துக்குடி முத்தையாபுரம் தேவி நகரில் வசிப்பவர் சத்திய நாராயணன். வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும் துறைமுக சபை உறுப்பினராக உள்ளார். நேற்று முன்தினம் இவர் தனது குடும்பத்துடன் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த போது உஷ் உஷ் என்று சத்தம் கேட்டுள்ளது. 

இதையடுத்து சத்யநாராயணன் வீட்டுக்குள் பார்த்த போது டைனிங் ஹால் அறையில் ஒரு பாம்பு பதுங்கி இருப்பது தெரியவந்தது. தூத்துக்குடி துறைமுக தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார்.

கட்டு விரியன் பாம்பு


தீயணைப்பு அலுவலர் மற்றும் பாம்பு பிடி வீரர் ஜிஎம் பாட்ஷா தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று சுமார் 20 நிமிடம் போராடி பாம்பை உயிருடன் பிடித்தனர். இந்த பாம்பு 6 அடி நீளம் இருந்தது. 

கட்டுவிரியன் வகையை சேர்ந்தது என்றும் விஷ தன்மை உள்ளது என்றும் தெரியவந்தது. பின்னர் அந்த பாம்பை காட்டுப் பகுதியில் கொண்டு விட்டனர். பாம்பை உடனடியாக பிடித்து குடும்பத்தினரின் உயிரை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு துறை துறைமுக சபை உறுப்பினர் சத்யநாராயணன் நன்றி தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web