அதிர்ச்சி... வங்கியில் அடகு வைத்த 70 சவரன் நகைகள் மாயம்... துணை மேலாளர் கைது!

 
தங்க நகை

மதுரையில் பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 சவரன் தங்க நகைகளை திருடிய துணை மேலாளரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்த மன்னாடிமங்கலம் கிராமத்தில் பேங்க் ஆப் பரோடா வங்கி செயல்பட்டுவருகிறது. இந்த வங்கியின் கிளை மேலாளராக ஸ்ரீராம் என்பவரும் துணை மேலாளராக கணேசன் என்பவரும் பணியாற்றி வருகிறார்கள்.

திருட்டு நகைகள் கொள்ளை

இந்நிலையில் கடந்த 14.11.2024 அன்று இந்த வங்கியில் பிராந்திய மேலாளர் ஜெய் கிஷான் உத்தரவுப்படி ஆய்வு மற்றும் தணிக்கை செய்யும் பணிகள் நடைபெற்றன. இதில் 2023-ம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை வங்கியில் 9 நபர்கள் அடகு வைத்த 561.5 கிராம் (70 பவுன்) தங்க நகைகள் அடங்கிய பொட்டலங்கள் வங்கி லாக்கரில் இல்லை.

மேலும் வாடிக்கையாளர்கள் 9 பேர் தங்களது நகைகளை அடகு வைத்ததற்கான வரவு வங்கி பதிவேட்டில் மட்டும் ஏற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் நகைகள் மாயமாகி இருந்தது. நகைகள் காணாமல் போனது பற்றி அதிகாரிகள் கேட்டபோது, துணை மேலாளர் மழுப்பலான தகவல்களை கூறியுள்ளார்.

பாங்க் ஆப் பரோடா

இதையடுத்து பேங்க் ஆப் பரோடா பிராந்திய மேலாளர் ஜெய் கிஷான், காடுபட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்திதில் வங்கி மேலாளருக்கு தெரியாமல் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 70 பவுன் நகைகளை துணை மேலாளர் கணேஷ் திருடியதும் விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் கணேஷ் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

பின்னர் மதுரை ஆனையூர் மல்லிகை நகர் ஹவுசிங் போர்டு காலனியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று இரவு சிறையில் அடைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?