அடுத்தடுத்து அதிர்ச்சி... புகாரளிக்க வந்த இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த இன்ஸ்பெக்டர்!

 
பாலியல்

காவல் நிலையத்திற்கு புகாரளிக்க வந்த இளம்பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்து அதிர வைத்திருக்கிறார் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர். நாடு முழுவதுமே இப்படி வேலியே பயிரை மேயும் கதையாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், பாதுகாப்பாக இருக்க வேண்டியவர்களே ஈடுபடும் போக்கு அதிகரித்து வருகிறது.

கேரள மாநிலம் கோட்டயம் காந்திநகரில் வசித்து வருபவர் 30 வயதுடைய பெண். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் பணமோசடி குறித்து புகார் கொடுக்க காந்திநகர் காவல்நிலையத்திற்கு சென்றிருந்தார். இந்த புகார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

கைது

இதன்படி காந்திநகர் இன்ஸ்பெக்டர் தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் அந்த பெண் தன்னுடைய புகார் மீது கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது புகாரை விசாரித்து வந்த இன்ஸ்பெக்டர் போலீஸ் நிலையத்தில் இல்லை. அவருக்கு பதிலாக 52 வயது பிஜு என்ற சப்-இன்ஸ்பெக்டர் அங்கு இருந்தார். அவரிடம் அந்த பெண் தனது புகார் தொடர்பாக மேலும் விசாரணை நடத்த வேண்டும் என கூறினார்.

இதைக்கேட்ட பிஜு, தொடர் விசாரணை நடத்த வேண்டுமானால் ரூ.25,000 ரொக்கப்பணம்  மற்றும் குறிப்பிட்ட வகை மது பாட்டிலை வாங்கி வருமாறு கூறினார்.  அதிர்ச்சியடைந்த இளம்பெண் பின்னர் மதுபான கடைக்கு சென்று பிஜு கேட்ட குறிப்பிட்ட ரக மதுபாட்டில் வாங்கிச் சென்று கொடுத்திருக்கிறார். அதனை பெற்றுக்கொண்ட சப்-இன்ஸ்பெக்டர் பிஜு, நைசாக இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்து தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார். 

சிறுமிக்கு பாலியல் சீண்டல்

இது குறித்து அந்த பெண் கோட்டயம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து சம்பவத்தன்று லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின் பேரில் அந்த பெண், மது பாட்டில் மற்றும் ரசாயன பொடி தடவிய ரூ.25 ஆயிரம் பணத்துடன் ஓட்டல் அறைக்கு சென்றார்.

இளம்பெண்ணின் வருகைக்காக காத்திருந்த பிஜு, இளம்பெண்ணை பார்த்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அப்போது, ஓட்டலில் மறைவாக இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், சப்- இன்ஸ்பெக்டர் பிஜுவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web