அடுத்தடுத்து அதிர்ச்சி... 200 சவரன் திருட்டு நகைகளை விற்று சொகுசு கார்... ஞானசேகரன் பரபரப்பு வாக்குமூலம்!

 
ஞானசேகரன்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், மாணவி ஒருவர் தனது நண்பருடன் இருந்தபோது ஞானசேகரன்  கல்லூரி மாணவியை  பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது.  இதனையடுத்து, ஞானசேகரனை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஞானசேகரன்

கைது செய்யப்பட்ட ஞானசேகரனின் வழக்கை 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு  விசாரித்து வருகிறது. விசாரணையின் போது ஏற்கனவே, திருட்டு, அடிதடி, வழிப்பறி, ஆள் கடத்தல்   சில வழக்குகள் நிலுவையில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இதனை தொடர்ந்து தற்போது 7 திருட்டு வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2022 முதல் 2024 வரை, சென்னை பள்ளிக்கரணை பகுதியில் வில்லா டைப் வீடுகளில் 200 சவரன் நகைகளை காரில் சென்று கொள்ளையடித்ததாக அவர் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஞானசேகரன்

திருடிய அந்த நகைகளை விற்று  அதில் சொகுசு கார் ஒன்றை வாங்கியதாகவும் மீதி பணத்தை வைத்து பிரியாணி கடை வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார் எனவும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், வேறு எதுவும் சம்பவங்களில் அவர் ஈடுபாட்டாரா? என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web