மீண்டும் அதிர்ச்சி... 717 இண்டிகோ விமான சேவைகள் ரத்து - புதிய விதிமுறைகளால் நெருக்கடி!
மத்திய அரசின் புதிய பணி நேர விதிமுறைகள் மற்றும் பணியாளர் பற்றாக்குறை காரணமாக இண்டிகோ நிறுவனம், 717 விமான சேவைகளை ரத்து செய்து அதிரடி முடிவை எடுத்துள்ளது.
மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம், விமானிகளின் சோர்வைக் குறைப்பதற்காகப் புதிய பணி நேர விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, விமானிகள் தொடர்ந்து நீண்ட நேரம் பணியில் இருக்க முடியாது மற்றும் அவர்களுக்குப் போதிய ஓய்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளால் அதிகப்படியான விமானிகள் தேவைப்படுகின்றனர். ஏற்கனவே விமானி பற்றாக்குறையில் இருந்த இண்டிகோ நிறுவனத்திற்கு, இது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் இண்டிகோ விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்பட்டதைக் கவனித்த DGCA, இது குறித்து விசாரணை நடத்தியது. அதன் விளைவாக, இண்டிகோவின் 10 சதவீத சேவைகளை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டது.

பல்வேறு உள்நாட்டு விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் மொத்தம் 717 விமான புறப்பாடு மற்றும் வருகை தொடர்பான சேவைகளை இண்டிகோ ரத்து செய்துள்ளது. இந்தத் திடீர் ரத்து காரணமாக, ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, பிஸியான வழித்தடங்களில் விமானக் கட்டணம் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
