ஜேஎன்யு-வில் மீண்டும் அதிர்ச்சி... பிரதமர் மோடிக்கு எதிராகக் கோஷம் எழுப்பிய மாணவர்கள்!
கடந்த 2020-ம் ஆண்டு ஜேஎன்யு வளாகத்தில் நடந்த வன்முறைச் சம்பவத்தின் 6-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர்கள் நடத்திய போராட்டம், தற்போது சட்டப் போராட்டமாக மாறியுள்ளது. போராட்டத்தின் போது, டெல்லி கலவர வழக்கில் சிறையில் இருக்கும் முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் உமர் காலித் மற்றும் ஷார்ஜீல் இமாம் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த செய்தி மாணவர்களுக்குத் தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக ஆட்சேபகரமான மற்றும் கடுமையான கோஷங்களை எழுப்பினர்.

இந்தச் சம்பவத்தை மிகத் தீவிரமாக எடுத்துக்கொண்ட ஜேஎன்யு நிர்வாகம்: மாணவர் சங்கத் தலைவர் அதிதி மிஸ்ரா உள்ளிட்ட மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி வசந்த் கஞ்ச் காவல் நிலையத்திற்குப் புகார் அனுப்பியுள்ளது. பல்கலைக்கழக அளவில் விசாரணை நடத்த ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் சஸ்பெண்ட் (இடைநீக்கம்) அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் இந்தச் செயலை வன்மையாகக் கண்டித்துள்ளனர். "பல்கலைக்கழகங்களை வெறுப்பின் ஆய்வகங்களாக மாற்ற அனுமதிக்க முடியாது. இது நகர்ப்புற நக்ஸலைட் மனப்பான்மையைக் காட்டுகிறது" என அவர்கள் விமர்சித்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
