தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி... 2 கார்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. 5 பேர் பலி; 7 பேர் படுகாயம்!
தமிழகத்தில் சமீப காலங்களாக விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. சிவகங்கை திருப்பத்தூர், தென்காசி என அரசு பேருந்துகள் மோதி விபத்திற்குள்ளாகி ஏற்படுத்திய உயிரிழப்புகளின் சோகமே மறையாத நிலையில், இன்று அதிகாலையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில், ஐயப்ப பக்தர்கள் இருவர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் அருகே கீழக்கரை பகுதியில், 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய கார்களில் ஒன்று ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தது என்றும், அதில் ஐயப்ப பக்தர்கள் பயணித்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. மற்றொரு கார் ஏர்வாடி நோக்கிச் சென்றுள்ளது.

விபத்து குறித்துத் தகவலறிந்து கீழக்கரை போலீஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை நேரத்தில் விபத்து நிகழ்ந்ததால், அதிவேகம் அல்லது ஓட்டுநரின் தூக்கக் கலக்கமே விபத்துக்குக் காரணமா என்பது குறித்து முதற்கட்ட விசாரணையை போலீஸார் தொடங்கியுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணியானது நடைபெற்று வருவதாகப் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதிய வேகத்தில் இரு கார்களின் முன்பகுதியும் முற்றிலும் நொறுங்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
