நெல்லையில் மீண்டும் அதிர்ச்சி... கல்லூரி மாணவி ஆணவக் கொலை.. சடலத்துடன் மருத்துவமனைக்கு சென்ற போலீசார்!

 
நெல்லை

தமிழகத்தில் சமீப காலங்களாக ஆணவக்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், நெல்லையில் மீண்டும் அதிர்ச்சியளிக்கும் விதமாக கல்லூரி மாணவி ஆணவக்கொலை செய்யப்பட்டதாக பரபரப்பாக கூறப்படுகிறது. மாணவி உயிரிழந்த நிலையில், பெற்றோர் மருத்துவமனைக்கு கழுத்தில் காயத்துடன் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.

நெல்லைப் பேட்டை செக்கடியைச் சேர்ந்தவர் பச்சிராஜன். அரசு பேருந்து ஒன்றின் ஓட்டுநரான இவரது மனைவி ரேவதி, தனியார் பள்ளி ஒன்றின் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார் ரேவதி. இவர்களின் இளையமகள் சிவமதி (18) பாளை கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். சிவமதி, பேட்டை கடசர் தெருவைச் சேர்ந்த ஆனந்த கிருஷ்ணனுடன் காதலித்து வந்தார். ஆனந்த கிருஷ்ணன் ஏர்டெல் நிறுவனத்தில் டீம் லீடராக பணியாற்றுகிறார்.

மாணவி இளம்பெண் சடலமாக சடலம் தற்கொலை கொலை

இருவரும் வெவ்வேறு பிரிவினரினால், சிவமதியின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உறவினர் மகனுடன் திருமணம் செய்து வைக்க செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். இதையொட்டி ஆனந்த கிருஷ்ணனும் சிவமதியும் வரும் 6ம் தேதி திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

கடந்த சில தினங்களுக்கு முன்பு, சிவமதியின் உடல்நிலை சரியில்லை எனக் கூறி, மாலை 6 மணியளவில் அவரை டவுன் கண்டியபேரி அரசு மருத்துவமனையில் கழுத்தில் காயத்துடன் பெற்றோர் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனை பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலீசார், மருத்துவமனைக்கு சென்று, சிவமதியின்  உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, மர்மச்சாவாக வழக்குப்பதிவு செய்து பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!