மீண்டும் அதிர்ச்சி... இலங்கை கடற்படை அட்டூழியம்... பாம்பன் மீனவர்கள் 14 பேர் கைது!

மீண்டும் அதிர்ச்சியளிக்கும் விதமாக இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்து வருகின்றனர். சர்வதேச எல்லைக் கோட்டை தாண்டி மீன் பிடித்ததாக கூறி பாம்பன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 14 பேரை கைது செய்து, மீனவர்களிடம் இருந்து ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை, தொடர்ந்து எல்லைக் கோட்டை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து அட்டூழியம் செய்து வருகின்றனர் இலங்கை கடற்படையினர். தமிழக மீனவர்கள் விஷயத்தில் இந்திய அரசும், தமிழக அரசும் மெத்தனப்போக்கைக் கடைப்பிடித்து வருவதாகவும், மீனவர்களின் பாதுகாப்பிற்கு நிரந்தர தீர்வை எட்ட முயற்சிக்கவில்லை என்றும் மீனவர்கள் புகார் கூறுகின்றனர்.
இலங்கை கடற்படையினரின் போக்கைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மீண்டும் 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 90 படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று மன்னார் வளைகுடா கடலுக்கு மீன்பிடிக்க சென்றன. மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, மன்னார் கடற்பகுதியில் இருந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியடித்தனர். தொடர்ந்து இலங்கை கடற்படை ஐந்துக்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் மீனவர்களை சுற்றி வளைத்து சிறை பிடித்தது. இதில் ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமான படகை சிறைபிடித்த இலங்கை கடற்படையினர், 14 பேரை கைது செய்து, ஒரு படகை பறிமுதல் செய்தனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!