அதிர்ச்சி... அதிமுக பிரமுகர் மகன் ஓட ஓட வெட்டிக் கொலை!

 
ஆனந்த்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் மகன் ஓட ஓட, துரத்தப்பட்டு சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், காரைப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜேக்கப் (62). ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக ஊழியரான இவர், அதிமுகவில் பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார். இவரது மகன் ஆனந்த் (38).

காஞ்சிபுரம் காரைப்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகராக பணியாற்றி வருகிறார் ஆனந்த். அதே அலுவலகத்தில் பணியாற்றும் இடைத்தரகர் அப்பு என்ற குணரஞ்சனுக்கும், ஆனந்த்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் ஜனவரி 7ம் தேதி ஆனந்த்துக்கும், அப்புவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

இதையறிந்த அவரது அப்பா ஜேக்கப் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளார். அப்போது ஆனந்த் தனது தந்தையிடம், ‘வேலை விவகாரத்தில் சிறிய பிரச்சினை. நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று கூறி தந்தையை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். 

எனவே, ஜேக்கப்பும் வீட்டுக்கு வந்து விட்டார். ஆனால், மாலையில் ஆனந்த் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜேக்கப் தனது மகனை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது செல்போனை தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது.

காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையம்

இந்நிலையில் சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, செட்டியார்பேட்டை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் ஆனந்த் இன்று காலை சடலமாக கிடப்பதாக அவரது தந்தை ஜேக்கப்புக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனே அங்கு சென்று ஆனந்த் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து, அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். பின்னர், காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் இது குறித்து ஜேக்கப் புகார் அளித்தார்.

உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆனந்த்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபடி விசாரித்து வருகின்றனர்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!

From around the web