அதிர்ச்சி... ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை! திருச்சியில் சோகம்!

 
ரவிசங்கர்

ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து, செய்வதறியாது தற்கொலை செய்து கொள்ளும் போக்கு தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து அனைத்து கட்சியினரிடம் இருந்தும் எதிர்ப்பு குரல் வலுத்தும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைச் செய்யப்படாமலே உள்ளது. நடிகர் சரத்குமார் உட்பட ஆன்லைன் ரம்மி விளையாடுங்க... பணத்தை அள்ளுங்க என்று பிரபலங்கள் விளம்பரங்களில் நடித்தும் இளைஞர்களை இந்த ஆன்லைன் ரம்மி விளையாட தூண்டில் வீசுகிறார்கள்.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாடி, அதில் தோற்றதால் அதிக கடனாகி மன அழுத்தத்தில் இருந்து வந்த திருச்சி ரவிசங்கர் தற்கொலைச் செய்து கொண்டார். இவர் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் அட்டெண்டராக பணிபுரிந்து வந்தார். 

ரம்மி

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை குடியிருப்பு 8வது தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர் (42). மருத்துவமனையில் அட்டெண்டராக வேலைப் பார்த்து வந்த ரவிசங்கர், ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி, தொடர்ந்து அதில் பணத்தை இழந்த நிலையில், ஒரு கட்டத்தில் தெரிந்தவர்கள், நண்பர்களிடம் கடன் வாங்கி ரம்மி விளையாட துவங்கினார். அளவுக்கு அதிகமான கடனாளி ஆன நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு ரவிசங்கர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று வழக்கம் போல் காலை ரவிசங்கர் மனைவி ராஜலட்சுமி ரவிசங்கரை எழுப்பிய பொழுது அவர் எழுந்திருக்கவில்லை. அதனை தொடர்ந்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ரவிசங்கரை மீட்டு துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.  அங்கு ரவிசங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் ரவிசங்கர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

ரம்மி

இந்த சம்பவம் குறித்து ராஜ லட்சுமி நவல்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் அடிப்படையில் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவிசங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  இறந்து போன ரவிசங்கருக்கு சாய்வர்சன் என்ற ஆறு வயது மகன் உள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web