நவகிரக கோயிலில் அதிர்ச்சி... கூட்ட நெரிசலில் சிக்கி பெண்மணி உயிரிழப்பு; பலர் படுகாயம்!
நவகிரக கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்மணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிறுமி உட்பட 7 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் நவக்கிரக கோயில் ஒன்றின் கோலாகலமான திறப்பு விழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் குழுமியிருந்தனர். பக்தி பரவசத்துடன் சந்தோஷமாக துவங்கிய விழா துயரத்தில் முடிந்தது.
Woman Killed, Many Injured In Stampede At Navgrah Temple In Madhya Pradesh's Gwalior#GwaliorStampede #NavgrahTemple #MadhyaPradeshNews https://t.co/A8omdSjOyt
— News18 (@CNNnews18) February 10, 2026
தாப்ரா நகரில் புதிதாக கட்டப்பட்ட கோயிலை திறக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு கலச யாத்திரை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அதிக அளவில் திரண்டதால் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
யாத்திரையில் கலந்து கொண்ட பெண்களுக்கு புனித கலசம் வழங்கப்பட்டது. கலசத்தை பெற பலர் ஒரே நேரத்தில் முனைந்து சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிக்கிய 70 வயது மூதாட்டி மூச்சுத்திணறி உயிரிழந்தார். மேலும் ஒரு பெண் மற்றும் சிறுமி உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
