விமான நிலையத்தில் அதிர்ச்சி... 400 கிராம் தங்கம்... ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்!

 
அமிர்தசரஸ் விமான நிலையம்

நாடு முழுவதும் சமீப காலங்களாக போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையேயும், 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையேயும் போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில், மலேசியாவில் இருந்து பஞ்சாப் வந்த விமான பயணியிடம் ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை அமிர்தசரஸ் விமான நிலையத்தில் விமான நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர். 

விமானம் விமான நிலையம்

பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸ் விமான நிலையத்தில், மலேசியாவில் இருந்து வந்த மன்தீப் சிங் என்ற பயணியிடம் கடந்த 26-ம் தேதி சோதனையிடப்பட்டது. அவர் கொண்டுவந்த பையில் 8.17 கிலோ போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதன் மதிப்பு சுமார் 8.17 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பயணி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சென்னை விமான

அதே சமயம் அமிர்தசரஸ் விமான நிலையத்திலேயே சிங்கப்பூரில் இருந்து வந்த மற்றொரு பயணியிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 400 கிராம் எடையுள்ள தங்க செயின் மற்றும் வளையல் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ.35.60 லட்சம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web