வார துவக்கத்திலேயே அதிர்ச்சி... தங்கம் விலை உயர்வு!

 
இன்று (ஜூன் 04) மாலை நிலவரப்படி தங்கம் சவரனுக்கு அதிரடியாக 320 ரூபாய் குறைந்தது!


சென்னையில் வாரத்தின் முதல் நாளான இன்று அதிர்ச்சியளிக்கும் விதமாக 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

தங்கம் விலை கடந்த ஏப்ரல் 22ம் தேதி புதிய உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.74,320-க்கு விற்பனை செய்யப்பட்டது. மறுநாளே அதே அளவுக்கு குறைந்து, ஒரு சவரன் ரூ.72,120க்கு விற்பனை செய்யப்பட்டது. 

தங்கம்

பின்னர் கடந்த 28ம் தேதி, தங்கம் விலை மீண்டும் ரூ.72,000க்கும் கீழ் குறைந்து, ஒரு சவரன் ரூ.71,520க்கு விற்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, கடந்த 2-ந்தேதி சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.70,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனையானது. இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.

தங்கம்

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

 
From around the web