அதிர்ச்சி... சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
May 9, 2025, 20:15 IST

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என பாகிஸ்தான் நாட்டை குறிப்பிட்டு மின்னஞ்சலில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் திடலில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18-ஆவது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச். 22ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
From
around the
web