அதிர்ச்சி... தனக்குத் தானே ஊசி போட்டு கல்லூரி மாணவன் தற்கொலை!

 
போதை ஊசி

தனக்குத் தானே ஊசிப் போட்டுக் கொண்டு பொறியியல் கல்லூரி மாணவர் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கொடுங்கையூர் மூலக்கடை திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவரது மகன் பால் யூட்டிகேஸ் ஜேசுதாஸ். 20 வயதாகும் இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரி ஒன்றில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு  வீட்டின் கழிவறைக்கு சென்றிருந்தார்.  நீண்ட நேரம் கழிவறைக்குச் சென்றவர், வெளியே வரவில்லை என நினைத்து இவரது தந்தை அமுல்ராஜ் சென்று பார்த்தபோது தனது மகன் மயங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.  

 போதை ஊசி
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்த பால் யூட்டிகேஸ் ஜேசுதாஸ்  கடந்த 2 வருடங்களாகவே தூக்கம் வராமல் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

ஊசி மூலம் கருத்தடை

அதற்கு  சிகிச்சை பெற்று வந்ததாகவும்  சோடியம் நைட்ரேட் எனும் வேதிப்பொருளை கடையில் வாங்கி அதனை ஊசி மூலம் செலுத்திக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததும் தெரிய வந்துள்ளது.  கடைசியாக பாத்ரூமுக்குள் செல்வதற்கு முன்பு தனது தங்கையிடம் அப்பாவை பத்திரமாக பார்த்துக் கொள் எனக் கூறிச் சென்றதாக தெரிகிறது.  கொடுங்கையூர் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web