அதிர்ச்சி... 2 குழந்தைகளுடன் தம்பதியர் தற்கொலை!

 
ஸ்ரீதா ரெட்டி

கடன் தொல்லைத் தொடர்ந்துக் கொண்டிருந்த நிலையில், மன அழுத்தத்தில் இருந்து வந்த தம்பதியர், வேறு வழிதெரியாமல் 2 குழந்தைகளுடன் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத், ஹப்சிகுடா பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் ரெட்டி. இவர் அதே பகுதியில் உள்ள நாராயண கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து  சந்திரசேகர் ரெட்டி திடீரென விடுவிக்கப்பட்டதால் சந்திரசேகருக்கு கடுமையான நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ்
சந்திரசேகருக்கு திருமணமாகி மனைவி கவிதா மற்றும் ஸ்ரீதா ரெட்டி என்ற மகளும், விஸ்வன் ரெட்டி என்ற மகனும் உள்ளனர். இதில் 14 வயதாகும் மகள் ஸ்ரீதா 9ம் வகுப்பும்  சிறுவன் விஸ்வன் 5 ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.  

உத்தரபிரதேச போலீஸ்
இந்நிலையில், கடந்த 6 மாத காலமாக கடும் நிதி நெருக்கடியால் தவித்து வந்த குடும்பத்தினர், கடன் சுமையும் அதிகரித்ததால் வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனைவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web