அதிர்ச்சி... பிரபல கிரிக்கெட் வீரர் சேவாக் சகோதரர் செக் மோசடி வழக்கில் கைது!

 
வினோத் சேவாக்

இந்திய அணியின் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக்கின் சகோதரர் வினோத் சேவாக், செக் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரேந்தர் சேவாக்கின் சகோதரர் வினோத் சேவாக், ஜல்தா புட் மற்றும் பெவரேஜஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் விஷ்ணு மிட்டல் மற்றும் சுதீர் மல்ஹோத்ரா ஆகிய மூவரும் இயக்குநர்களாக செயல்பட்டு வருகின்றனர். 

இவர்கள் மூவரும் ஹிமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த கிருஷ்ணா மோகன் என்பவரின் ஸ்ரீ நைனா பிளாஸ்டிக் நிறுவனத்திடம் இருந்து தங்கள் நிறுவனத்திற்காக பொருட்கள் வாங்கி வருகின்றனர். அதற்காக ரூ.7 கோடி செக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த செக்கை வங்கியில் கிருஷ்ணா மோசன் டெபாசிட் செய்துள்ளார். ஆனால் அந்த செக், வங்கியில் பணம் இல்லாத காரணத்தால் பவுன்ஸாகி இருக்கிறது. இதற்கான காரணம் குறித்து ஸ்ரீ நைனா பிளாஸ்டிக் நிறுவனம் கேட்டப்போது சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் போதுமான பணம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. 

வினோத் சேவாக்

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட 3 பேர் மீதும் நீதிமன்றத்தில் கிருஷ்ணா மோகன் வழக்கு தொடுத்துள்ளார். இந்த விசாரணைக்கு அவர்கள் மூவரும் ஆஜாராகாத நிலையில், 2023ல் காவல்துறையினர் மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கில் வீரேந்தர் சேவாக்கின் சகோதர் வினோத் சேவாக் சண்டிகர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?