அதிர்ச்சி... தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழப்பு!

 
தண்ணீர் தொட்டி கழிவுநீர்

மும்பையில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்துக் கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கியதில் மூச்சுத் திணறி  பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெற்கு மும்பையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை இன்று சுத்தம் செய்துக் கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் தொட்டி கழிவுநீர்

மும்பை நாக்படா பகுதியில் உள்ள டிம்டிம்கர் சாலையில் அமைந்துள்ள பிஸ்மில்லா ஸ்பேஸ் கட்டிடத்தில் இன்று மதியம்  5 தொழிலாளர்கள் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக உள்ளே அவர்கள் 5 பேரும் சென்ற நிலையில், அவர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மூச்சுத்திணறி மயங்கி கீழே விழுந்தனர். உடனடியாக அங்கு இருந்த பிற தொழிலாளர்கள் தீயணைப்பு படையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.

தண்ணீர் தொட்டி கழிவுநீர்

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் அவர்கள் 5 பேரையும் மீட்டு அரசு ஜேஜே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் 5 பேரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web