அதிர்ச்சி... தாஜ்மஹாலில் வெளிநாட்டு இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!
வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் சுற்றுலாவாக வந்திருந்த இளம்பெண் ஒருவருக்கு தாஜ்மஹாலில் பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் அமைந்துள்ள நிலையில், உலகம் முழுவதும் இருந்தும் தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் நேரில் வந்து பார்த்து ரசித்து செல்கின்றனர். அந்த வகையில் செக் குடியரசை சேர்ந்த ஒரு பெண்ணும் சுற்றிப் பார்ப்பதற்காக சென்றிருந்தனர். இந்த பெண் தற்போது காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகார் ஒன்றினை அளித்துள்ளார்.
அந்த புகாரில் கடந்த ஏப்ரல் 3ம் தேதி பிற்பகல் அவர் தாஜ்மஹாலை பார்ப்பதற்காக சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், அந்த இளம்பெண்ணை தகாத முறையில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த பகுதியில் அமைந்துள்ள சிசிடிவி கேமராவை வைத்து விசாரணை நடத்திய போது, அதே பகுதியில் வசித்து வரும் கரண் ரத்தோர் என்பவர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. போலீசார் கரண் ரத்தோரைத் தேடி வந்த நிலையில் நேற்று கைது செய்துள்ளனர். தற்போது கரண் ரத்தோரைக் கைது செய்த போலீசார், வேறு யாருக்காவது இப்படி பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளாரா என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!