அதிர்ச்சி... போதைப்பொருள் விற்றதாக 4 இளைஞர்கள் கைது... சீரழிகிறதா தமிழகம்!

 
போதைப்பொருள்

சமீப காலங்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும்  போதைப்பொருட்களின் விற்பனை கனஜோராக நடைபெற்று வருகிறது. போலீசார் தொடர் சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரால் கைது செய்யப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் 30 வயதிற்கும் கீழுள்ளவர்களாக இருப்பது வேதனை தருகிறது. அடுத்த தலைமுறை தடம் மாறி சீரழிகிறதோ என்று பதைபதைக்க வைக்கிறது. இந்நிலையில் சென்னையில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது

போதைப் பொருள் கடத்தல், பதுக்கல், விற்பனையை முற்றிலும் தடுக்க சென்னை காவல் ஆணையர் அருண் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன் ஒருபகுதியாக ரோந்து பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக துரைப்பாக்கம் காவல் நிலைய போலீசார் அதே பகுதி 200 அடி சாலை பகுதியில் நின்றிருந்த இளைஞர்கள் 4 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.

அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து, அவர்களை போலீசார் தனியாக அழைத்துச் சென்று உடைமைகளை சோதித்தபோது 6 கிராம் மெத்தம் பெட்டமைன் வகையான போதைப் பொருள் அவர்களிடம் இருந்தது தெரிய வந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார், சென்னை திருமங்கலம் லோகேஷ் (24), கடலூர் மாவட்டம் தேவநாதன் (27), கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ராஜேஷ் (24), வேளச்சேரி ஆலன் கிரிகெரி (25) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

போதைப்பொருள்

இது குறித்து காவல் ஆணையர் கூறுகையில், ``போதைப் பொருட்கள் கடத்தி வருபவர்கள், விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும். மேலும், போதைப் பொருட்களை கடத்தும், பயன்படுத்தும், விற்பனை செய்யும் நபர்களை பற்றி தகவல் தெரிந்தால், 7871078100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். அவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்'' என்றார்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web