அதிர்ச்சி... தமிழகத்தில் அதிகரிக்கும் கஞ்சா கடத்தல்.... வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்!

 
திருச்சியில் காரில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது!

உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் பகுதியில் 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா பொருட்களைக் கடத்தி வந்த ஆந்திராவை சேர்ந்த ஒருவரை கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

கஞ்சா

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மடப்பட்டு பகுதியில் தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கையில் பெரிய பையுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து சென்றுக் கொண்டிருந்த நபரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

தொடர்ந்து அந்த நபர் வைத்திருந்த பையை சோதனை செய்து பார்த்த போது அதில் 12 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர்.

கஞ்சா கடத்தல்

பின்னர் இதனை கடத்தி வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தாடி ராஜிவை போலீசார் கைது செய்தனர். இதனிடையே அவரிடம் இருந்த 12 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.  தாடி ராஜி, எங்கிருந்து கஞ்சாவை கடத்தி வந்துக் கொண்டிருந்தார்? இந்த கஞ்சாவை எங்கு கொண்டு செல்ல இருந்தார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web