அதிர்ச்சி... இட்லி, சட்னி சாப்பிட்ட சிறுமி திடீர் உயிரிழப்பு!
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே, வேர்க்கடலைச் சட்னியுடன் இட்லி சாப்பிட்ட சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உணவு ஒவ்வாமையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பனமுகை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி வனிதா. இவர்களுக்குப் பிரனிதா (11 ), டிக்சிதா (9), டில்சிதா (7) என எ மகள்கள் உள்ளனர். கடந்த நவம்பர் 23ம் தேதி காலையில் வனிதா தனது மூன்று மகள்களுடன் வீட்டில் சமைத்த வேர்க்கடலைச் சட்னியுடன் இட்லி சாப்பிட்டுள்ளார். அன்றிரவு வனிதா மற்றும் அவரது மூன்று மகள்களுக்கும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. வயிற்றுவலி ஏற்பட்டதால், மறுநாள் நவம்பர் 24ம் தேதி அவர்கள் பிரம்மதேசம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

அன்றைய தினம் மாலையில், பிரனிதா மற்றும் டிக்சிதா இருவரும் மயக்கம் அடைந்தனர். இதனால் அவர்கள் உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சையின் அடுத்த கட்டமாக, நவம்பர் 26ஆம் தேதி பிரனிதாவை மட்டும் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றிச் சிறுமி பிரனிதா பரிதாபமாக உயிரிழந்தாள்.

வேர்க்கடலைச் சட்னியுடன் இட்லி சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே உடல்நலக்குறைவு ஏற்பட்டுச் சிறுமி உயிரிழந்த சம்பவம், அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துப் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழப்புக்கான சரியான காரணம் என்ன என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
