அதிர்ச்சி... போலி ஆதார் அட்டை தயாரிக்க தனி நிறுவனம்... அதிர வைத்த இளைஞர்!

கேரள மாநிலத்தில் போலி ஆதார் அட்டை தயாரித்து வந்த மையம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், போலியாக ஆதார் அட்டைத் தயாரித்து வந்த ஒருவரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
போலி ஆதார் அட்டைகளை தயாரிக்கும் மையத்தை நடத்தி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹரிஜுல் இஸ்லாம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கேரள போலீசாருக்கு பெரும்பாவூரில் உள்ள கடை ஒன்றில் போலியாக ஆதார் அட்டை தயாரித்து தருவது குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பெரும்பாவூரின் தனியர் பேருந்து நிலையம் அருகே ஷாப்பிங் வளாகம் ஒன்றின் தரை தளத்தில் உள்ள செல்போன் கடைக்குள் போலியாக ஆதார் அட்டை தயாரிக்கும் மையம் ஒன்று செயல்பட்டு வந்தது தெரியவந்தது.
இந்த செல்போன் கடையை முற்றுகையிட்ட போலீசார், கடைக்குள் நுழைந்து சோதனையிட்ட போது பல போலி ஆதார் அட்டைகள், மடிக்கணினிகள், பிரிண்டர்கள், செல்போன்கள் மற்றும் சுமார் ரூ.50,000 பணத்தையும் பறிமுதல் செய்தனர். போலி ஆதார் அட்டை தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்த அசாமை சேர்ந்த ஹரிஜுல் இஸ்லாம் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!