பெங்களூரில் அதிர்ச்சி... ஷர்மிளா மரணத்தில் திடீர் திருப்பம்... நள்ளிரவில் பால்கனி வழியே நுழைந்த கல்லூரி மாணவன்!

 
ஷர்மிளா

ஒரு மரணம் விபத்தா அல்லது கொலையா என்பதைத் தீர்மானிப்பதில் காவல்துறையின் நுணுக்கமான விசாரணை எவ்வளவு முக்கியம் என்பதற்குப் பெங்களூரு ராமமூர்த்தி நகர் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. தீ விபத்தில் மூச்சுத்திணறி உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் இன்ஜினியர் ஷர்மிளா (34), உண்மையில் பக்கத்து வீட்டு கல்லூரி மாணவரால் படுகொலை செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது.

மங்களூருவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஷர்மிளா, பெங்களூரு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இவருக்குப் பக்கத்து வீட்டில் கேரளாவைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவன் கர்னல் வசித்து வந்துள்ளார். தன்னைவிட 15 வயது மூத்தவர் என்று கூடப் பாராமல், ஷர்மிளா மீது கர்னல் ஒருதலைக் காதலில் இருந்து வந்துள்ளார். கடந்த 2-ம் தேதி ஷர்மிளாவின் தோழி ஊருக்குச் சென்றதைப் பயன்படுத்திக் கொண்ட கர்னல், நள்ளிரவில் பால்கனி வழியாக ஷர்மிளாவின் வீட்டிற்குள் நைசாக நுழைந்துள்ளார். தூங்கிக் கொண்டிருந்த ஷர்மிளாவை அத்துமீறி அணைத்து, பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

தற்கொலை

இதற்கு ஷர்மிளா கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கர்னல், அவரது கழுத்தில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் சுயநினைவை இழந்த ஷர்மிளா, இந்தச் சம்பவத்தை வெளியே சொல்லிவிடுவார் என்ற பயத்தில் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இதன்பின்னர், இது ஒரு விபத்து போலக் காட்டத் திட்டமிட்ட அந்த மாணவன், ஷர்மிளாவின் படுக்கையறைக்குத் தீ வைத்துள்ளார். தீப்பிடித்து எரிந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் தகவல் கொடுக்க, போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் வந்து பார்த்த போது, ஷர்மிளா புகையினால் மூச்சுத்திணறி இறந்தது போலத் தோன்றியது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில் ஷர்மிளாவின் கழுத்தில் காயங்கள் இருந்ததும், தீப்பிடிப்பதற்கு முன்பே அவர் உயிரிழந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளையும், செல்போன் சிக்னல்களையும் ஆய்வு செய்த போலீசார், மாணவன் கர்னலைப் பிடித்து விசாரித்த போது அவர் உண்மையை ஒப்புக் கொண்டார். தற்போது அவர் மீது கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!