பெங்களூரில் அதிர்ச்சி... மனைவியைக் கொல்ல பீகார் சென்று துப்பாக்கி வாங்கிய மென்பொறியாளர்... 15 நாட்கள் துப்பாக்கிப் பயிற்சி!
பெங்களூருவில், சேலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் பாலமுருகன், தனது மனைவி புவனேஸ்வரியைச் சுட்டுக்கொன்ற வழக்கில், அவர் ஒரு தேர்ந்த குற்றவாளியைப் போலத் திட்டமிட்டுச் செயல்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
பெங்களூருவில் வசித்து வந்த இந்தத் தம்பதியிடையே, மனைவியின் நடத்தையில் பாலமுருகன் கொண்ட சந்தேகத்தால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த ஓராண்டாகப் பிரிந்து வாழ்ந்த புவனேஸ்வரி, விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இது பாலமுருகனை ஆத்திரத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.

மனைவியைக் கொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் பாலமுருகன் மேற்கொண்ட முயற்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன: துப்பாக்கி வாங்குவதற்காக மட்டும் பாலமுருகன் மூன்று முறை பீகார் மாநிலத்திற்குச் சென்றுள்ளார். பீகாரிலேயே தங்கி, துப்பாக்கியை எப்படிக் கையாளுவது, குறிப்பார்ப்பது எப்படி என்பது குறித்து 15 நாட்கள் தீவிரப் பயிற்சி எடுத்துள்ளார்.
கூலிப்படையை ஏவி தோல்வியுற்ற நிலையில், தானே களத்தில் இறங்கி கடந்த டிசம்பர் 24-ம் தேதி பொதுமக்களின் கண்முன்னே தனது மனைவியைச் சுட்டுக் கொன்றுள்ளார். இதற்கு முன்பாகச் சேலத்தைச் சேர்ந்த ஒரு கூலிப்படையிடம் பணம் கொடுத்து மனைவியைக் கொல்ல பாலமுருகன் ஒப்பந்தம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த முயற்சி கைகூடாததால், தானே துப்பாக்கியுடன் பீகாரிலிருந்து பெங்களூரு திரும்பியுள்ளார்.

தற்போது சிறையில் உள்ள பாலமுருகனிடம் மாகடி ரோடு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்குத் துப்பாக்கி வழங்கிய பீகார் நபர்கள் மற்றும் அவர் தொடர்பு கொண்ட சேலம் கூலிப்படை கும்பலைத் தேடி தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
