சென்னையில் பரபரப்பு.. ஒரே வீட்டில் 1,000 ஆண்டு பழமையான 55 சிலைகள் பறிமுதல்!

 
சைலேந்திர பாபு

தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் காணாமல்போன பழங்கான சிலைகளை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு பெண்ணின் வீட்டில் பழங்கால சுவாமி சிலைகள் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்த வீட்டுக்கு சென்று போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 55பழங்கால கற்சிலைகளை கைப்பற்றினர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2012ஆம் ஆண்டு அரியலூர்மாவட்டம் செந்துறை அடுத்த வேலூர் கிராமத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயிலில் கதவை உடைத்து, வரதராஜப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, அனுமன் ஆகிய 4 உலோக சிலைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இது பற்றி சிலை கடத்தல் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் அனுமன் சிலை இருப்பது கண்டறியப்பட்டது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் ஏலம் மூலம் அந்த சிலையை வாங்கியது தெரியவந்தது. பின்னர்,மத்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியுடன் அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்த அனுமன் சிலையை தமிழக சிலை கடத்தல் தடுப்பு போலீசார் மீட்டுள்ளனர்.

சைலேந்திர பாபு

இந்நிலையில், 55 பழங்கால கற்சிலைகள், அனுமன் சிலையை டிஜிபி சைலேந்திர பாபு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, சென்னையில் கைப்பற்றப்பட்டுள்ள 55 கற்சிலைகளும் தமிழகம், வடமாநிலங்கள் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் திருடப்பட்டவை.

இவை அனைத்தும் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இவை எந்தகோயிலுக்குச் சொந்தமானது என்றுவிசாரித்து வருகிறோம். சில மாதங்களுக்கு முன்பு காலமான சர்வதேச சிலை கடத்தல் குற்றவாளி தீனதயாளனிடம் இருந்து இந்த சிலைகள் வாங்கப்பட்டுள்ளன. அவர் யாரிடம் வாங்கினார் என்று விசாரணை நடக்கிறது.

தமிழகத்தில் புலன் விசாரணையில் உள்ள 301 வழக்குகள், கண்டுபிடிக்கப்படாத நிலையில் உள்ள 101 வழக்குகளில் சம்பந்தப்பட்ட சிலைகளா என்றும் விசாரணை நடத்தி வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளில் 306 சிலைகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் உதவியால்64 சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் உள்ள 16தமிழக சிலைகள் விரைவில் தமிழகம் கொண்டு வரப்படும்.

சைலேந்திர பாபு

தமிழக சிலை கடத்தல் தடுப்புபிரிவு கடந்த 1983-ம் ஆண்டு முதல்1,000-க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்டுள்ளது. இதில் சில நூறு சிலைகள் சம்பந்தப்பட்ட கோயில்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கைவசம் 1,541 பழமை வாய்ந்த சிலைகள் உள்ளன. இவை அனைத்தும் சிலை பாதுகாப்பு மையத்தில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன.

249 சிலைகளின் முப்பரிமாண வடிவம் www.tnidols.com என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. மற்ற சிலைகளின் வடிவத்தையும் பதிவேற்றும் பணி நடந்துவருகிறது. மீட்கப்பட்ட அனுமன்சிலை அரியலூர் மாவட்டம் வரதராஜப் பெருமாள் கோயிலில் விரைவில் ஒப்படைக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web