டெல்லியில் மீண்டும் அதிர்ச்சி... 15 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதி குழந்தை உயிரிழப்பு!

 
கார்
டெல்லியில் ஏற்கெனவே ஓட்டுநர் உரிமம் பெறாத சிறுவன் கார் ஓட்டிச் சென்று 3 பேர் உயிரைக் காவு வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்த அதிர்ச்சியாக 15 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதி ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலையில் முகமெல்பூரில் உள்ள பிர்னி சாலையில் 15 வயது சிறுவன் ஒருவன் தனது அண்ணனின் காரை ஓட்டிச் சென்றுள்ளான். இந்நிலையில் சிறுவன் ஓட்டிச் சென்ற கார் அங்கிருந்த ஒன்றரை வயது குழந்தை மீது மோதியது. இதில் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

விபத்து

இதையடுத்து உடனடியாக குழந்தையின் மாமா குழந்தையை, நரேலாவில் உள்ள சத்யவாடி ராஜா ஹரிஷ் சந்திரா (SRHC) மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். 

கார் விபத்து விபத்தில்

இதைத் தொடர்ந்து குழந்தையின் உடல் ஜஹாங்கிர்புரியில் உள்ள பாபு ஜகஜீவன் ராம் நினைவு (BJRM) மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக காரை ஓட்டிய சிறுவனையும், காரின் உரிமையாளரான அவரது அண்ணனையும், போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web