தர்மபுரியில் அதிர்ச்சி... சக நண்பர்கள் மத்தியில் விஷம் குடித்த +2 மாணவன்!

 
விஷம்

தர்மபுரியில் சக நண்பர்கள் முன்னிலையில் அரசு பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவன், திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே செக்காரப்பட்டி கிராமத்த்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவர் ஒருவர், தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற மாணவர், திடீரென வகுப்பறையில் சக மாணவர்கள் முன்னிலையில் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ்

இதனைக் கண்ட சக மாணவர்கள், அதிர்ச்சி அடைந்து உடனடியாக பதறியடித்தப்படியே இது குறித்து தங்களது ஆசிரியருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக பள்ளி ஆசிரியர்களும், ஊழியர்களும் அந்த மாணவனை சிகிச்சைக்காக தொப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

அதன் பின்னர் தொப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மாணவனை அனுப்பி வைத்தனர். அங்குத் தொடர்ந்து மாணவருக்கு தீவிர சிகிச்சை அளித்து மருத்துவர்கள் காப்பாற்றினர்.

உத்தரபிரதேச போலீஸ்

இது குறித்த தகவலறிந்த தொப்பூர் போலீசார், தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். பிளஸ்-2  பொதுத்தேர்வுக்கு பயந்து பள்ளி வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தாரா? சக மாணவர்கள் மத்தியில் மாணவனை ஆசிரியர்கள் கண்டித்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றாரா? என பல கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web