குஜராத்தில் அதிர்ச்சி... ரூ.42 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்து விபத்து; தொழிலாளர்கள் படுகாயம்!

 
குஜராத் பாலம் இடிந்து

குஜராத் மாநிலம் வல்சாட் நகரில், ரூ.42 கோடி மதிப்பீட்டில் அவுரங்கா ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த புதிய பாலம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்த விபத்தில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 5 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குஜராத் பாலம் இடிந்து

வல்சாட் நகரை அருகில் உள்ள கிராமங்களுடன் இணைக்கும் வகையில் சுமார் 700 மீட்டர் நீளத்திற்கு இந்தப் பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் பணியை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வழக்கம் போல நேற்று கட்டுமானப் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாகப் பாலத்தின் இரண்டு தூண்களுக்கு இடைப்பட்ட ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் உடனடியாக 5 ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுச் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

குஜராத் பாலம் இடிந்து

விபத்தில் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என வல்சாட் மாவட்ட ஆட்சியர் உறுதிப்படுத்தியுள்ளார். பாலத்தில் பொருத்தப்பட்டிருந்த கம்பியில் ஏற்பட்ட சேதத்தால் இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!